Breaking News
recent

தமிழைப் பழித்தாரே வைரமுத்து - இழிவான கட்டுரையும் பொய்களே முழுவதுமாய்...

தினமணி பத்திரிக்கை ஏற்பாட்டில் பெரும் பொருட் செலவில் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகில் உள்ள ராஜாபாளையம் திருப்பதி தேவஸ்தான மண்டபத்தில் "தமிழை ஆண்டாள்" எனும் தலைப்பில் சினிமா பாடலாசிரியர் பேசினாராம். தினமணி இக்கட்டுரையை 8/1/2018ம் தேதி வெளியிட்டது வைரமுத்துவின் கட்டுரை ஆண்டாளை இழிவு படுத்துவதாய் உள்ளது என தமிழ் அறிஞர்கள், தமிழ் பற்றாளர்கள் சமூக ஆர்வலர்கள் அறிவுசார் சமூகம் கண்டனம் பெரிதாய் வந்தது. வைரமுத்துவின் கட்டுரை முழுதும் தமிழ் மெய்யியலிற்கு விரோதமாய் இருந்தாலும் அவர் கட்டுரை முழுக்க ஆண்டாளை கொச்சைப் படுத்தியதையும், இறுதியில் தேவதாசி என அமெரிக்க ஆய்வு சொல்லும் வழியில் தான் பார்க்க இயலும் என்பது பெரிதும் கண்டிக்கப் பட்டது தமிழர்கள் அருவருப்பான வைரமுத்துவின் கட்டுரைக்கு வந்த சமூக வலைதளங்களில் வந்த எதிர்ப்பாலையால் தினமணி ஜனவரி 10ம் தேதி முதல் பக்கத்தில் வைரமுத்துவின் ஒரு வருந்துகிறேனையும்- நடுப்பக்கத்தில் தினமணியும் வருத்தம் தெரிவித்தது தினமணி கூறியது -//ஆண்டாளை தமிழ் தெய்வமாக பக்தி இலக்கியத்தின் உச்சமாக, வணக்கத்திற்கு உரிய அன்னையாக "தினமணி"யும் கருதுகிறது// வைரமுத்துவின் கட்டுரையின் தயாரிப்பு - மொழிநடை ஏதுமே மேலுள்ள அந்த அடிப்படையை பின்பற்றவே இல்லை. ஆண்டாளை கொச்சைப் படுத்தவே கட்டுரை வரையப்பட்டிருந்தது. முதல் வரி கொண்டு இறுதிவரை தமிழர் மெய்யியலை இழிவு படுத்தும்படி தான் வைரமுத்து படித்த கட்டுரை இருந்தாலும், அதில் மிகவும் கண்டனத்துக்கு உள்ளான பகுதி கீழே- //அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகத்தின் சுபாஷ் சந்திர மாலிக்கை ஆசிரியராகக்கொண்டு வெளியிட்ட “Indian movement - some aspects of dissent, protest and reform” என்ற ஆய்வு நூலில் ஆண்டாள் பற்றி இப்படி ஒரு குறிப்பு எழுதப்பட்டிருக்கிறது : “Andal was herself a devadasi who lived and died in the Srirangam Temple” – பக்தர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் ஆணாதிக்க எதிர்ப்பாளர்களும், சமய சமூக மறுப்பாளர்களும் இதை எண்ணிப்பார்ப்பார்கள்.// சினிமா பாடலாசிரியர் வைரமுத்து இந்தக் கட்டுரை பல மாதங்களாய் ஆய்வு செய்து தயாரித்தமையும், அந்த அமெரிக்க இந்தியானா பல்கலைக் கழக நூல் வைத்து, அதில் ஆய்வுக் கருத்தை தான் சொன்னேன் எனவும் மீண்டும் 10ம் தேதி -"புண்பட்டிருந்தால் வருத்தம்" என்ற முதலை வருத்தமிலும் சொன்னார். 10ம் தேதி காலை வைரமுத்து அந்த அமெரிக்க இந்தியானா பல்கலை ஆய்வினையே தன்னுடைய புண்படுத்தியிருந்தால் - வருத்தமிலும் பதிப்பு வந்த உடனேயே பல ஆய்வாளர்கள் தங்கள் முயற்சியால் சொல்லப்பட்ட நூல் மார்க்சிஸ்டுகள் இந்திய மெய்யியல் விரோதக் குமபலுடையது சிம்லாவிலிருந்து வெளிவந்தது என தெளிவாக்கினர். வைரமுத்துவின் அராஜகமான அருவருப்பான கட்டுரையைக் கண்டிக்க எதிர்வினையாய் பாஜக தலைவர் ஹெச்.ராஜா சற்றே கடுமையாய் ஒரு கூட்டத்தில் பேசிட தமிழர்கள் பலரும் கட்டுரையைத் தேடி படித்தனர். தமிழர் அனைவரும் வைரமுத்துவின் கட்டுரை ஒரு விஷம் தடவிய தமிழர் விரோதக் கட்டுரை எனப் புரிய ஒவ்வொரு ஊரிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பிய்து, ஆரம்பத்தில் வைஷ்ணவ ஆலயம், ஜீயர்கள் தொடங்கினாலும் பெருவாரியன தமிழரும் பங்கெடுத்தனர். வைரமுத்து சொன்ன ஆய்வுக் கட்டுரை இந்தியானா பல்கலைக் கழக நூல் அவர் கையில் வைத்து 3 மாதம் படித்த நூல் இந்தியானா பல்கலைக் கழகம் - அப்படி ஒன்று வெளிய்டவில்லை என மின்னஞ்சல் மூலம் உறுதி செய்தது. இவையும் வலைப்பூவில் ஆய்வாளர்கள் வெளிப்படுத்தினர். வைரமுத்து சொன்ன அந்த நூல் மெய்யியல் விரோத சர்ச் காசில் எழுதும் மார்க்சிய கம்யுய்னிச அதாரவு மேம்போக்கு ஆய்வு வழியினர் நூல் என அதுவும் எடுக்கப் பட்டது, அந்த நூலின் தொகுப்பாளர் தான் சுபாஷ் சந்திர மாலிக். “Indian Movements: Some Aspects of Dissent Protest and Reform,” edited and introduced by S. C. Malik and published by Indian Institute of Advanced Study, Shimla in 1978. சொல்லப் பட்ட கட்டுரை எழுதியது M.G.S. நாராயணன் மற்றும் வேலுதட் கேசவன் என கேரள கோழிக்கோடு பல்கலைக் கழகத்தினர், இருவருக்கும் தமிழ் படிக்கத் தெரியாது. M. G. S. Narayanan and Veluthat Kesavan published a paper, “The Bhakti Movement in South India” “Cheraman Perumal Nayanar notes the reception given to Shiva by devadasis of all ages while he went out in procession around the streets in Kailas35, and Andal herself is a Devadasi who lived and died in the Sri Rangam Temple36.” தமிழறியாத கேரள பேராசிரியர் - சேரமான் பெருமாள் நாயனார் கைலாசத்தில் எக்காலத்தில் தேவதாசிகள் சிவனிற்கு அர்பணிக்கப் பட்டதால் - ஆண்டாள் ஸ்ரிரங்கத்தில் தேவதாசியாய் இருந்திருக்கக் கூடும் என சொன்னனர். The two footnotes given for support for those two lines are as follows: Ceraman Perumal Nayanar, Adiyula, M. Raghava Aiyangar, ed. Caruventar Ceyyukovai, 1951, Trivandrum, Vol.II, pp.136-64. T. A. Gopinatha Rao, The History of Sri Vaishnavas, Madras, 1923, Madras, p. 5. இந்த ஆய்வு கருத்திற்கு அவர்களுடை ஆய்வு தரவு எனச் சொன்னது திருT.A.கோபிநாதராவ் நூலினிலிருந்து கோபிநாதராவ் நூல் மூலத்தில் சற்று இது பற்றி அவர் ஏதுமே கூறவே இல்லை So when we look at page no.5 of the said book, what, T. A. Gopinatha Rao recorded is this, “When she reached marriageable age, she refused to marry anyone except the God Ranganatha of the Srirangam temple. The God appeared to the Alvar in a dream to declare before him his acceptance of the girl in marriage and ordered her to be brought to his residence at Srirangam. Periyalvar took her there with great eclat and left her in her Lord’s house and returned to his quiet residence at Srivilliputtur.” பின்னாளில் இந்திய வரலாற்று அமைப்பு தலைவராய் ஆன நாராயணன் மற்றும் அவர் மாணவர் கேசவன் - எவ்வித ஆதாரமும் - அவர்கள் கருத்திற்கு இல்லாமல் - குறிப்பு எனச் சொன்ன நூலில் அந்த வார்த்தை கூட இல்லை எனும் போது - இவர்கள் வரலாற்று ஆசிரியர்களா? அல்லது வேண்டுமென்றே பொய்யை பரப்ப இந்த நூலைப் பயன்படுத்திக் கொண்டனரா? வைரமுத்து தன்னை திராவிட இயக்கத்தோடு இணைத்துக் கொண்டு அதன் மூலம் நிறைய பயன் பெற்றவர். தமிழைக் காட்டு மிராண்டி பாஷை என்ற திராவிட நயினா ஈ.வெ.ராமசாமி எனும் கன்னடர் வழியினர் தமிழர் விரோதிகளாய், தமிழர் மெய்யியல், பண்பாடு நாகரீகத்தின் தொன்மையை இழிவு செய்பவர்கள். ஈ.வே.ராவும்- செம்மொழி தமிழும் திராவிட இயக்க நயினா ஈ.வே. ராமசாமி தமிழ் - சிலப்பதிகார்ம், தொல்காப்பியம், திருக்குறள் அனைத்தையும் அருவருப்பான வார்த்தைகளால் பழித்தவர். அருவருப்பான வைரமுத்துவின் கட்டுரை பற்றி அவரிடம் தொலைப் பேசியில் திரு.கல்யாணராமன் எனும் பாஜக தொண்டர் பேச வரிரமுத்து "தமிழை ஆண்டாள்" எனும் கட்டுரை திருப் பொருளைப் பேசவில்லை, தெருப்பொருளைப் பேசினேன் என்றார். வைரமுத்து - கிறிஸ்துவர் வழியில் -தமிழைக் காட்டு மிராண்டி பாஷை என்ற திராவிட நயினா ஈ.வெ.ராமசாமி எனும் கன்னடர் வழியில் - தமிழரின் புனிதமானவற்றை இழிவு படுத்தவே இக்கட்டுரை என சாட்சி தந்தார். 3 மாதம் அமெரிக்க இந்தியானா பல்கலைக் கழக நூல் படித்து எழுதினேன் என்ற வைரமுத்து, ஒன்று இந்தக் கட்டுரையை அவர் தயாரிக்கவில்லை, தயாரித்தவர் - தவறாய் சொன்னார் என விளக்க வேண்டும், தற்போது இணையத்தில் அக்கட்டுரை யார் எழுதியது எனச் சொன்ன 3 நாள் பின் தான் வைரமுத்து அந்த ஆச்ரியர் பெயரை வெளியிட்டு ஒரு டிவிட்ட்ரில் அறிக்கை தந்தார். அவரிடம் உள்ள அந்த நூல் என்ன ஆனது? தினமணி கூறியது -//ஆண்டாளை தமிழ் தெய்வமாக பக்தி இலக்கியத்தின் உச்சமாக, வணக்கத்திற்கு உரிய அன்னையாக "தினமணி"யும் கருதுகிறது// இப்படி மதிப்புமிக்க புனித தாயார் பற்றி தெருப்பொருள் என்றதே உங்களை காட்டிக் கொடுத்தது. ஆண்டாள் தமிழர் - அவர் எழுதிய பாடல்கள், அவர் தந்தாயார் எழுதிய பாடல்கள் - இவைகள் முக்கியமான முதன்மை தரவுகள்(Primary source). தமிழில் உள்ளவற்றை விட்டு தமிழ் அறியாதோர் பிதற்றியதை எந்த நூல் என்பது கூட பல நாள் கூறாமல் பித்தலாட்டம் செய்துவிட்டு தற்போது - மீண்டும் தமிழர் மெய்யியலைப் பழிக்கும் வகையில் ஒரு அழுவாச்சி வீடியோ நாடகம் மக்கள் ஏற்க மாட்டார்கள். https://www.youtube.com/watch?v=1lHc_uaw_es முழுகட்டுரை தவறான முறையில் அந்த அவைக்கு பொருத்தமில்லாத வழியில் எழுதித் தரப்பட்டதை வாசித்தேன் மன்னித்து விடுங்கள் -என ஆண்டாள் தாயார் சன்னதிக்கு வந்து மன்னிப்பு கேட்டால் உங்களிடம் சிறூ தமிழுணர்வு இன்னும் ஒட்டிக் கொண்டு உள்ளது என நம்பலாம் Thanks to mainly and other sources https://vedaprakash.wordpress.com/2018/01/20/vairamuthus-research-on-andal-the-quoted-quote-research-methodology-and-the-confession-of-eminent-historians/ Invested $100 in Cryptocurrencies in 2017...You would now have $524,215: https://goo.gl/efW8Ef
Senkottai Sriram Srinivasan

Senkottai Sriram Srinivasan

No comments:

Post a Comment

Powered by Blogger.