Breaking News
recent
தமிழ்தாத்தா பற்றி வைரமுத்துவின் அவதூறு

     தமிழ் இலக்கிய முன்னோடிகள் என்னும் தொடர் “தமிழ் காத்தான் சாமி” என்ற தலைப்பில் 7/9/17 அன்று வைரமுத்து பேசிய பேச்சு 8/9/17 தினமணியில் வெளியாகியுள்ளது.

     ஸ்ரீ ஆண்டாள் பற்றிய பேச்சில் எப்படி தவறான தகவல்களை மேற்கோள் காட்டி ஆண்டாளை அவதூறு பேசினாரோ அப்படியே தமிழ் தாத்தா உவேசாவையும் அவதூறு பேசியுள்ளது தெரிகிறது.

     வைரமுத்துவுக்கு இது தொடர் வாடிக்கைபோலும்.  

     வையாபுரிப்பிள்ளை அவர்கள் சொல்லியுள்ளதை கார்த்திகேசு சிவத்தம்பியும், மார்க்ஸும் மேற்கோள் காட்டியுள்ளார்களாம், இதை வைரமுத்து மேற்கோள்காட்டி பேசுகிறார்.

     அதாவது இண்டானியா பல்கலைக்கழகம் மேற்கோள் போல......

     வைரமுத்துவுக்கு, தமிழ் தாத்தா மேல் ஒரு வருத்தம் இருந்ததாம் இதோ அவரது வார்தைகளிலேயே பார்த்துவிடுவோம்..

     உவேசா மீது எனக்கு ஒரு வருத்தமிருந்தது, இதனை நான் சொல்லுவது சுகம் இதனை சொல்லியாகணும் அப்பத்தான் நான் உண்மையாக இருப்பேன்.



உவேசா மீது எனக்கு ஒரு வருத்தமிருந்தது, அவர் மகாகவி பாரதியை மத்தித்ததில்லை,பாரதியை அரசாங்க விரோதி என்றும், வருணாசிரம ஒழுக்கத்தினை தூ என்று தள்ளியவர் என்றும்,இவரையும் இவரது கொள்கையையும் இவரது தமிழையும் கூட அய்யர் மதித்திருந்தார் என்பதற்கு சான்றுகள் ஏதும் இல்லை என்று வையாபுரிப்பிள்ளை எழுதுகிறார்.

 “வையாபிரிப்பிள்ளையை தவிர்த்து விட முடியாது, அவர் தமிழர்களின் காலத்தினை பின்னுக்கு கொண்டு வந்து விடுகிறார் என்று சொல்றீங்கள்ள, அத மட்டும் விட்டு விட்டு உண்மையெல்லாம் எடுத்துக்கணும் .... உண்மையிருந்திருக்கு அவர்கிட்ட .ஆராய்ச்சி வெறி .... “

தமக்கு நடந்த பாராட்டுவிழாவிற்கு பாரதி எழுதிவந்த வாழ்த்துப்பாவை  சுவாமிநாத அய்யர் அனுமதிக்கவில்லை கார்த்திகேசு சிவத்தம்பி, அ.மார்க்ஸ் எழுதுகிறார்கள் எனவே உவேசாவை பிற்போக்குவாதி என்றே பெருங்கருத்து கொண்டிருந்தேன்.

சரி இப்போது இந்த நிகழ்ச்சி உண்மையா என்று பார்போம்.

இதோ அந்த நிகழ்ச்சிக்கு வருவோம்.

ஒரு சமயம் பிரசிடென்ஸி காலேஜின் தமிழ் பேராசிரியராக இருந்த உவேசாவுக்கு மஹாமாஹோபாத்தியாய விருதை அரசாங்கத்தார் அளித்தார்கள். அதைக் கொண்டாட காலேஜ் மாணவர்கள் ஒரு கூட்டம் நடத்தினார்கள். நிர்வாகிகள் பாரதியை விஷயத்தினை சொல்லி விழாவுக்கு அழைத்திருந்தார்கள்.

பாரதியும் உவேசாவும் ஒரு ஊரில் சென்னையில் வாசித்த போதும் பரஸ்பரம் பரிச்சியம் இல்லை. ஐயர் அவர்கள் பாரதியாரைப் பற்றி ஒன்றும் அறியார். பாரதி என்ற பெயரைக் கூட கேட்டதில்லை.

பாரதியார் மூன்று பாக்கள் எழுதி உவேசாவுக்கான பாராட்டு விழாக் கூட்டத்தில் பாடினார்.

பாரதியின் நண்பர் ஒருவர் திருநெல்வேலிக்காரர். சென்னை சட்டக்கல்லூரியில் படித்து வந்தார். பாரதியுடன் மிகவும் பழகியவர். கூட்டத்தில் பாரதி பாடி முடித்தவுடன் பாரதியிடம் சென்று அந்த பாக்கள் மூன்றும் ஆபாசம், சொல் குற்றம் , பொருட்குற்றம், பொருள் குற்றம் நிறைந்திருக்கிறது என்று சபையில் உள்ள பிரமுகர்கள் கருதுகிறார்கள் என்று கூறினார்.
   
  களங்கமற்ற மனத்தினரான பாரதி அந்த வார்தைகளை நம்பி மனம் தளர்ந்து நொந்த மனதுடன் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

பாரதியை உவேசா வாழ்த்துப்பா பாடவிடவில்லை என்று வையாபுரிப்பிள்ளை செய்த ஆய்வு அல்லது காய்வு முழு தவறு, என்பது புரிகிறது இதை அந்த விழாவில் நேரடியாக பங்கு பெற்ற ஸ்ரீ நாராயண ஐய்யங்காரே பதிவு செய்கிறார்.    

அடுத்த தவறை பார்போம்.. கூட்டம் நிறைவுறும் சமயத்தில் ஐயரவர்கள், அதாவது உவேசா பேசினார்..

இன்று சபையில் என்னை புகழ்ந்து முதலில் சில கவிகள் பாடப்பட்டன. சொற்சுவையும்,பொருட்சுவையும், உவமை நயமும் மிக்க அந்த கவிகளால் நான் மயங்கினேன். தயவு செய்து அக்கவிகளை மற்றொரு தடவையும் சொல்லிக் கேட்க விரும்புகிறேன்” என்று நடுச்சபையில் பகிரங்கமாகக் கேட்டுக்கொண்டார் தமிழ் தாத்தா.

நிர்வாகிகள் சபையில் பாரதியாரைத் தேடினார்கள். பாரதியார் காணப்படவில்லை என்று வருத்தத்துடன் உவேசா விடம் கூறினர்.
   
    ஐயரவர்கள் பாரதியின் பெயரை அப்பொழுதுதான் முதல் முதலாக தெரிந்துகொண்டார். அந்த நாள் முதல் ஐயரவர்களுக்கு அன்பும் மதிப்பும் ஏற்படலாயின.

     பாரதியின் பெயரைக்கூட கேட்டரியாத உவேசா, தனக்கு வாழ்த்துப்பா பாடிய பிறகுதான் பாரதியின் பெயரை கேட்ட உவேசா எப்படி பாரதியை அரசாங்க விரோதி என்றோ, வர்ணாஸ்ரம தர்மத்தினை தூ என்று துப்பியவர் என்றோ அறிந்திருக்க முடியும்?

     பாரதி தேச விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர், பத்திரிகையாளர்,கவி.. என்று இன்னும் எத்தனையோ தகுதிகள் உள்ளவர் .

    உவேசாவோ தமிழ் காக்க, ஓலைச்சுவடிகள் தேடி ஓடிய தேனி, அவ்ருக்கு மற்ற விஷயங்களில் ஈடுபட நேரம் இல்லை அதனால் அவர் பாரதியை அறிந்திருக்க வாய்ப்பு இல்லாமல் போனது.

     ஆனால் பாரதி தமிழ் உணர்வுள்ளவன் உவேசா செய்த சாதனைகளை அறிந்திருந்தான்.   

     கூட்டம் நடத்தியவர்கள் மறுநாள் காலை பாரதியாரைப் பார்த்து அவரைப் பற்றி ஐயரவர்கள் புகழ்ந்து கூறிய வார்தைகளை விவரித்து சொன்னார்கள். அப்போதுதான் பாரதியாரும் தமது நண்பரின் தவற்றை அறிந்து அவர் நடத்தைக்கு வருந்தினார்.

     பாரதியை அறிந்திராத உவேசா அவர் தன்னை பற்றி வாழ்த்து பாடிய பிறகுதான் அறிந்துகொண்டார் உண்மை இப்படியிருக்க...பாரதியை தன்னை வாழ்த்தி வாழ்த்துப்பா பாட வந்தபோது அதை தடுத்தார் என்று உவேசா மேல் கடும் குற்றச்சாட்டு வைக்கும் வைரமுத்துவின் மேற்கோள்கள், பொய் கோள்கள்.

     கவிதைக்கு பொய் அழகு என்று சினிமா பாடலில் எழுதினார் வைரமுத்து. அவரது ஆராய்ச்சிக்கு பொய்கள் அழகு சேர்க்காது.     

   பாரதியை மதித்ததில்லை, பாரதியை அரசாங்க விரோதி என்றும், வருணாசிரம ஒழுக்கத்தினை தூ என்று தள்ளியவர் என்றும், இவரையும் இவரது கொள்கையையும் இவரது தமிழையும் கூட ஐயர் மதித்திருந்தார் என்பதற்கு சான்றுகள் ஏதும் இல்லை என்று வையாபுரிப்பிள்ளை சொன்னதை ஆராயாமல் சொலுகிறார் வைரமுத்து, தேறாத தெளிவு வைரமுத்துவின் கட்டுரை.            

   தமக்கு நடந்த பாராட்டு விழாவிற்கு பாரதி எழுதிவந்த வாழ்த்துப்பாவை  சுவாமிநாத அய்யர் அனுமதிக்கவில்லை கார்த்திகேசு சிவத்தம்பி, அ.மார்க்ஸ் எழுதுகிறார்கள் எனவே உவேசாவை பிற்போக்குவாதி என்றே எண்ணினேன் என்கிறார் வைரமுத்து.

     அதாவது ஆண்டாள் பற்றி இண்டானியா பல்கலைகழக ஆய்வு என்று சொன்னார். ஆனால் அதை வெளியிட்டது அந்த பல்கலைக்கழகமில்லை அதை எழுதிய நாராயணன், கேசவன் இருவரும் நாங்கள் சொன்னது ஆதாரமில்லாத யூகம் என்று சொன்னார்கள்

     இப்போது உவேசா பற்றி  வையாபுரிப்பிள்ளை சொன்னதாக அதை அ.மார்க்ஸ்,  கார்த்திகேசு சிவத்தம்பி, வழிமொழிந்ததாக சொல்லுகிறார்.

 உவேசாவை வர்ணாஸ்ரமவாதி என்கிறார். பாரதியை மதிக்கவில்லையாம் பாரதியின் தமிழை மதிக்கவில்லையாம் அடுக்கிக் கொண்டே போகிறார் வைரமுத்து. அபத்த ஆராய்சி, உவேசா பற்றி இவர் எழுத இதற்கு நான்கு மாதம் ஆனதாம்.

     கசடில்லாதவற்றினை அல்லவா கற்கவேண்டும்.  

   கட்டுக்கதைகளையல்லவா கற்று அதனை தினமணி நாளிதழில் இலக்கிய தொடர் என்று எழுதி பேசி வைத்துவிட்டார் வைரமுத்து. இந்த அபத்தத்தினை என்ன சொல்லுவது?

     இதோ மேலும் பார்போம் ..

   இதோ பாரதியை வெறுத்த உவேசா என்னும் வர்ணாஸ்ரமவாதி அதாவது வைரமுத்து பார்வையில் வர்ணாஸ்ரமவாதி,   அவருக்கு உவேசா பற்றி தவறான தகவல் சொன்னவர்களுக்கு அதாவது பாரதியை மதிக்காத உவேசா பாரதிக்கு செய்தது என்ன என்று பார்ப்போமா?

     மித்ரன் ஆசிரியர் ஜி‌. சுப்ரமணிய ஐயரையும் சந்தித்து பாரதியின் அருமையை விளக்கிச்சொல்லி அதிக பரிவு காட்டும்படி உவேசா கேட்டுக்கொள்ள அதனை ஒட்டி பாரதிக்கு மாதம் பத்து ரூபாய் சம்பள உயர்வு கிடைத்தது.

     அத்துடன் நின்றுவிட்டாரா ஐயர் பாரதியை மதிக்காதவர் ஆயிற்றே..

    திருவாடுதுறை ஆதினத்தினை சந்தித்து பாரதியை பற்றி பேசி பாரதியை திருவாடுதுறை அழைத்து வர ஏற்பாடு செய்தார். சன்னிதானம் சம்மதித்தும், பாரதி அந்த சந்திப்புக்கு சம்மதிக்கவில்லை.

      சன்னிதானத்தின் அன்பினால் பாரதியின் வறுமையை முழுமையாக போக்கிவிட உவேசா போட்டிருந்த திட்டம் பாரதி ஏற்காததால் நிறைவேறாமல் போனது.

இலக்கண இலக்கியங்கள் நிறைய அறிந்தவர்கள் தான் சன்னிதானத்துக்கு போகக்கூடும் அதற்கு நான் லாயக்கற்றவன் என்று பாரதியார் என்னிடம் வெளிப்படையாக சொன்னார் என்கிறார் பண்டிட் நாராயண ஐயங்கார்.

சரி விழா நிகழ்ச்சி பற்றி விலாவாரியாக் சொல்லும் இந்த நாராயண ஐயங்கார் யார்?   

 பண்டிட் எஸ். நாராயண அய்யங்கார் தமிழ் ஸம்ஸ்க்ருதம் இரண்டிலும் அறிஞர். ஆயுர்வேத சாஸ்திரத்தில் நிபுணர். பாரதியின் நெருங்கிய நண்பர். இளமையிலிருந்து பாரதிக்கு நண்பர்.

இந்த நிகழ்ச்சியைப் பற்றி பண்டிட் எஸ் நாராயண அய்யங்கார் என்பவர் “காசியில் சுப்பையா சென்னையில் பாரதி!” என்று தலைப்பிட்டு கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்

அந்த கட்டுரை தினமணி சுடர் இதழில் 8/9/1956 , மற்றும் 16/9/1956 தேதிகளில் வெளியாகியுள்ளது. இதை வெளிவர செய்தவர் ரா.அ. பத்மநாபன் (1917 – 2014) பாரதி ஆய்வில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர். பிரபலமான பாரதி காவலர்



இந்த கட்டுரை பின்னாளில் காலச்சுவடு பதிப்பகத்தில் “பாரதியைப் பற்றி நண்பர்கள்” என்று நூலாக வந்துள்ளது. “காசியில் சுப்பையா சென்னையில் பாரதி” கட்டுரை நான்காவது கட்டுரையாக உள்ளது.

அ.மார்க்ஸ், கார்த்திகேசு சிவத்தம்பி, வையாபுரிப்பிள்ளை இவர்களை நான்கு மாதம் ஆய்வு செய்து தேடிய வைரமுத்து, அவர்கள் சொன்ன நிகழ்ச்சி உண்மைதானா என்று தெரிந்துகொள்ள முடியாது தடுத்தது எது?

யார் எதை சொன்னாலும் எழுதினாலும் அதை தனது நாஸ்திக,அல்லது குறிப்பிட்ட ஜாதி மீதான வெறுப்புக்கு சாதகமாக இருந்தால் பயன்படுத்திக்கொள்ளும் வைரமுத்து, உண்மையை ஏனோ மறக்கிறார்,மறுக்கிறார் என்பதே உண்மை.

இந்த பொய்களை வரிசைப்படுத்த உவேசாவை நான் புகழ்ந்து கட்டுரையில் கூறியவற்றை பார்க்கவேண்டும் என்று ஸ்ரீ ஆண்டாள் விஷயத்தில் சொன்னதைப் போலவே சொல்லுவார்.

இவர் ஒருவரின் மீது பழியை அவதூரை வீச முதலில் புகழ்வார் கட்டுரையின் கடைசியில் இகழ்வார் அதாவது, பெரிய வாழை  இலையில் விதவிதமான அறுசுவை உணவுகளை பரிமாறி கடைசியாக ஒரு சொட்டு அறுவருக்கத்தக்க நரகலை வைப்பார் நாம் நரகலை வைக்கிறீர்களே  என்றால் நீங்கள் ஏன் அறுசுவை உணவை பார்க்கவில்லை என்பார்.

ஆம் இவர் இளைய தலைமுறைக்கு தமிழ் இலக்கிய முன்னோடிகளை எடுத்து செல்லுகிறாராம் அதற்கு தினமணி களம் அமைக்கிறதாம்.

... சீ சீ சீ...

உவேசா வர்ணாஸ்ரமவாதி என்றும், ஸ்ரீ ஆண்டாள் தேவதாசியென்றும் இவர் அடுத்த தலைமுறைக்கு அறிமுகப் படுத்துகிறார்.. திருமூலரை பற்றி இவர் எழுதியதை படித்தால்தான் தெரியும் அதில் உள்ள ...

தனது நாஸ்திக மனதை இதோ மொழி காத்தான் சாமி கட்டுரையிலேயே கூறுகிறார்.

கரி வலம் வந்த பால்வண்ணனாதன் சன்னதியில் வரகுண பாண்டியன் ஏட்டுச் சுவடிகளை கூட்டிவைத்திருந்த தலத்தில் உவேசா சென்று அங்குள்ள சன்னிதானத்திடம் அந்த ஓலைச்சுவடிகளைப் பற்றிக் கேட்கிறார், ஆகமங்களில் சொல்லியுள்ளபடி நெய்யில் தோய்த்து ஓலைச்சுவடிகளை ஹோமத்துக்கு ஆகுதி செய்துவிட்டோம் என்றாராம்.

உடனே உவேசா அப்படியென்றால் அந்த ஆகமத்தைத்தான் ஆகுதி செய்யவேண்டும் என்றாராம்.

இதைப்படித்தவுடன் உவேசா மீது பாரதி விஷயத்தில் ஏற்பட்ட வருத்தம் வைரமுத்துவிற்கு குறைந்ததாம்.. அதாவது உவேசா ஆகமத்தினை அல்லவா கொளுத்தவேண்டும் என்று சொன்னதால்.. அதாவது உவேசா சொல்லியது நாஸ்திகத்துக்கு ஏற்புடையது என்பதால்.

சரி எந்த ஆகமத்தில் ஓலைச்சுவடிகளை நெய்யில் தோய்த்து கொளுத்த சொல்லியுள்ளது ?

எந்த ஆகமத்திலும் அப்படி இல்லை..

அது அறிந்துதான் அந்த பொய்யான ஆகமத்தினை கொளுத்த சொன்னார் எனபதே உண்மை. செல்லரித்த சுவடிகளை மறு படி எடுத்து வைப்பதுதான் வழக்கம்,

மறு “படி” (மீள் உரு) எடுத்த பிறகு தான் ஆற்றில் விடுவார்கள். இன்றும் கூட செல்லரித்து விட்ட புனித நூல்களை ஆற்றில் விடுவதுதான் வழக்கம்.   

வைரமுத்துவின் கட்டுரை லிங்க்


தமிழைக் காட்டுமிராண்டி பாஷை என்று சொன்னவரை போற்றும் திராவிட வைரமுத்துவிடமிருந்து ஓலைச் சுவடியில் உறங்கிக்கிடந்த தமிழை காலக் கறையான் தின்று கொண்டிருந்த தமிழை மீட்டெடுத்து உலகிற்கு தந்த தமிழ் தாத்தாவுக்கு புகழ்மாலையை நாம் எப்படி எதிர்பார்ப்பது.    

தமிழ் உணர்வாளர்கள் இப்போது குரல் கொடுப்பார்களா? கண்டங்களை வெளிப்படுத்துவார்களா?

சூரிய மூலையில் பிறந்த ஆரிய மூளைக்கு திராவிட வணக்கம் என்று முடிக்கிறார், வைரமுத்து. அதாவது தன்னை திராவிடன் என்கிறார்.

வைரமுத்துவே இந்த கட்டுரையில் சொன்னபடி ஆரிய என்றால் உயர்ந்த என்று பொருள்..

சூரிய மூலையில் பிறந்த தமிழ் தாத்தாவின் புகழ் மீது திராவிட வைரமுத்து வீசிய அவதூரை நீக்கிவிட்டத் திருப்தியில் ஆரியத்தமிழனாகிய அடியேன் தமிழ் தாத்தாவுக்கு பல்லாண்டு பாடுகிறேன், மகிழ்வில் ...
Senkottai Sriram

Senkottai Sriram

No comments:

Post a Comment

Powered by Blogger.